எங்களின் இணையதளத்திற்கு வருகை தந்த அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

எங்களின் இணையதளத்திற்கு வருகை தந்த அனைவரையும் அன்புடன் ஸலாம் கூறி வரவேற்கிறோம்

பிப்ரவரி 21, 2012

அமானின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்ற நிகழ்ச்சி

கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதி
அமானின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்ற நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், கடந்த 17.02.2012 அன்று அமானின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுக்கொண்ட நிகழ்ச்சி துபையில் மம்ஸாரில் உள்ள சகோதரர் பனிஅப்தால்  அலுவலகத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். சிராஜ் ஹஜ்ரத் அவர்களின் கிராஅத்துடன் துவங்கிய இந்நிகழ்வில், அமானின் தலைவர் சகோதரர் ஷவ்கத் அலி அவர்கள் வரவேற்று பேசினார்கள்.
                   அவரைத்தொடர்ந்து, முன்னாள் தலைவர் சகோதரர் ஹாஜாமுபாரக் அவர்கள், பேசும்போது, தமது நிர்வாகத்தில் செய்து வந்த பணிகள் பற்றியும், புதிதாக செய்யவேண்டிய பணிகள் பற்றியும், புதிய நிர்வாகிகளுடன் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், மற்ற வளைகுடா பகுதிகளில் வாழும் ஆர்வமுள்ள நமதூர் சகோதரர்களை அமானின் கீழ் ஒருங்கிணைப்பதற்காக தாம் எடுத்த முயற்சியை தொடரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதோடு அமானின் புதிய தலைவர் சகோதரர் ஷவ்கத் அலி அவர்களிடம் நிர்வாக பொறுப்பை ஒப்படைத்தார். 
அமான் நிர்வாக பொறுப்பை தலைவரிடம் ஒப்படைக்கும் முன்னாள் தலைவர்
                         தொடர்ந்து முன்னாள் பொருளாளர் அமீருதீன் அவர்கள்  அமானின் புதிய பொருளாளர் சகோதரர் ஹாஜா நிஜாமுதீன் அவர்களிடம் தன்னிடமிருந்த வரவு செலவு கணக்குகளை ஒப்படைத்து அமானின் நிதியை அமர்வில் கலந்து கொண்ட முன்னாள், இன்னாள் நிர்வாகிகளின் முன்னிலையில் புதிய பொருளாளரிடம் ஒப்படைத்தார். 
அமானின் பொருளாளர் அமான் நிதியை புதிய பொருளாளரிடம் ஒப்படைத்தபோது
தொடர்ந்து, அமான் பைத்துல்மால் நிர்வாகிகளின் கலந்துரையாடல் துவங்கிது. பைத்துல்மால் நிர்வாகிகள் ஒவ்வொருவரும் தங்களின் சார்பில் நமதூர் சகோதரர்களிடமும், செல்வந்தர்களிடமும், ஜக்காத்து நிதியை அதிகபட்சமாக  திரட்டி அதை அந்த வருடமே முறைப்படி விநியோகம் செய்வது எனவும், அதுமட்டுமல்லாமல், அமானின் ஒவ்வொரு உறுப்பினரிடமும் தங்களின் ஜக்காத்து நிதியை அமான் பைத்துல் மாலில் சேர்ப்பிக்க வலியுறுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. 
நிறைவாக, அமானின் புதிய தலைவர் ஷவ்கத் அலி அவர்கள் தமது நிர்வாகப்பணியை செய்யத்துவங்கினார்கள். முதலாவதாக ஒவ்வொரு மண்டல செயலாளருக்கும் அமானின் உறுப்பினர்களின் பட்டியலை மண்டலவாரியாக பிரித்து கொடுத்து அவர்களின் பணியை இலகுவாக்கினார்கள். தொடர்ந்து பேசும் போது, முன்னாள் நிர்வாகிகளின் ஒத்துழைப்பும் இன்னாள் நிர்வாகிகள், செயல்வீரர்கள், மற்றும் நமதூர் சகோதரர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் எப்போதும் எமக்கு வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, நமதூர் சகோதரர்களின் ஒருங்கிணைந்த ஆதரவோடும், ஒத்துழைப்போடும் அமானை சிறப்பாக கொண்டு செல்வோம் என்று உறுதி அளித்தார்கள். புதிய தலைவரின் இந்த பேச்சு, அவர் முன் உள்ள, அமான் பைத்துல்மால், அமான் எஜுகேஷன் செண்டர், நமதூரில் அமான் அலுவலகம் திறப்பது, தனது பொறுப்பின் கீழ் உள்ள நிர்வாகிகளை அரவணைத்து வழிநடத்துதல், மற்றும் அமானில் உள்ள நமதூர் சகோதரர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒன்றுபடுத்துதல், போன்ற சவாலான காரியங்களை எல்லாம் சுலபமாக சமாளித்து சாதிக்கும் உறுதி அவருடைய பேச்சில் தெரிந்தது. அல்ஹம்துலில்லாஹ். இறுதியாக, அமான் பைத்துல்மால் செயலாளர் சகோதரர் அனீஸுதீன் அவர்கள் நன்றி கூறி துஆ ஓதி அமர்வை நிறைவு செய்தார்கள்.

இந்த நிர்வாகக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்

1. அமானின் தாயகப்பிரதிநிதியாக தற்போது இருந்து வரும் சகோதரர் சாதிக் அலி (திரி ஸ்டார்) அவர்களையே தொடர்ந்து பொறுப்பில் இருக்கும்படி கேட்டுக்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது
2. அமானின் தாயக அலுவலகம் விரைவில் திறப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல்
3. அலுவலகம் திறந்தவுடன் அமான் எஜுகேஷன் சென்டர் துவங்க முயற்சிகள் மேற்கொள்ளுதல்
4. அமான் பைத்துல்மாலுக்கு ஒவ்வொருவரும் பொறுப்பெடுத்துக்கொண்டு ஜக்காத்து நிதியை சேகரித்து அதை அந்த வருடத்திலேயே வறியோருக்கும், எளியோருக்கும் கொடுத்து உதவுதல்
5. அமான் பைத்துல்மால் நிர்வாகம் அமானின் கீழ் தனி நிர்வாகமாகவே இயங்கும் எனவும், பைத்துல்மாலுக்காக தனியாக மினிட் புக் வைத்து பாதுகாக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
6. அமானின் ஈமெயில் மற்றும் வெப்சைட் சகோதரர் ஹாஜாமுபாரக் அவர்கள் பொறுப்பில் இயங்கும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
7. அமானின் பொறுப்பாளார்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் அமானின் பொதுச்செயலாளர் அழைப்பு விடுக்கும் அமானின் எல்லா கூட்டத்திலும் கலந்து கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

களத்தொகுப்பு: அபுஒமர்