எங்களின் இணையதளத்திற்கு வருகை தந்த அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

எங்களின் இணையதளத்திற்கு வருகை தந்த அனைவரையும் அன்புடன் ஸலாம் கூறி வரவேற்கிறோம்

பிப்ரவரி 25, 2012

அமானின் அபுதாபி மண்டல நிர்வாகிகள் கூட்டம்


அமானின் அபுதாபி  மண்டல நிர்வாகிகள் கூட்டம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 24.02.2012 அன்று அபுதாபியில் அமானின் மண்டல நிர்வாகிகளின் கூட்டம்


அமானின் துணைத்தலைவர் சகோதரர் ஷேக்தாவூத் அவர்கள் தலைமையில் 
  நடைபெற்றது. புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற பிறகு அபுதாபியில் கூடும் முதல் 
 கூட்டம் இதுவாகும். இதில் அபுதாபி முன்னாள், மற்றும் இந்நாள் நிர்வாகிகள் 
அனைவரும் கலந்து கொண்டனர்.   இதில், அபுதாபியில் வாழும் அடியற்கை சகோதரர்களிடம் அமானின் நிர்வாகிகள் நேரில் சென்று சந்தித்து அவர்களிடம் அமானின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளிப்பது உள்ளிட்ட பல முடிவுகள் எடுக்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்.

விவாதிக்கப்பட்ட விஷயங்களும் முடிவுகளும்  
1. அபுதாபியில் வாழும் நமதூர் சகோதரர்களை நிர்வாகிகள் நேரடி சந்திப்பு செய்து அமானின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளிப்பது, மற்றும் சந்தா செலுத்துவதின் அவசியத்தை எடுத்து சொல்வது என்று முடிவு செய்யப்பட்டது.
2. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அபுதாபி மண்டல பொதுக்கூட்டத்தை  கூட்டுவது எனவும், முதல் பொதுக்கூட்டத்தில் ஜகாத் பற்றி முழு விளக்கம் கூறும் வகையில் சிறப்பு அழைப்பாளரை அழைக்க அமான் பைத்துல் மால் கமிட்டிக்கு வேண்டுகோள் விடுப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
3. அமீரகத்தின் அலைனில் வாழும் நமதூர் சகோதரர்களை எதிர்வரும் 09.03.2012 அன்று அபுதாபி நிர்வாகிகள் நேரில் சென்று சந்திப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
4. அமான் கல்வி வழிகாட்டல் குழு பொறுப்பாளர் அல்அமீன் அவர்கள் அமான்எஜுகேஷன்சென்டர் சம்மந்தமாக  இதுவரை நடைபெற்று வரும் பணிகள் பற்றி விளக்கினார்.
மேலும் அமீரகத்தில் உள்ள  நமதூர் சகோதரர்கள் தங்களின் கல்வித்தகுதியை
 மேம்படுத்திக்கொள்ளும் வகையில்   அமான் கல்வி வழிகாட்டல் குழு சார்பாக கல்வி கருத்தரங்கம் ஒன்று நடத்துவதற்கு தலைமை நிர்வாகத்தை வலியுறுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
5. அபுதாபியில் வாரந்தோறும் அமான் சார்பாக தஜ்வீது முறைப்படி குர்ஆன் ஓதுவதற்கு பயிற்சி வகுப்பு நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக குர்ஆன் ஓத கற்றுக்கொள்ள ஆர்வமுள்ள சகோதரர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்துக்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டது . வகுப்பு நடத்தப்படும் நாளும் நேரமும் அறிந்து கொள்ள தங்களின் பெயர்களை பதிவு செய்ய
தொடர்பு எண்கள்: ஹாஜா முபாரக் 050-6715819,
                                       சேக்தாவூத்  050-6621354