எங்களின் இணையதளத்திற்கு வருகை தந்த அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

எங்களின் இணையதளத்திற்கு வருகை தந்த அனைவரையும் அன்புடன் ஸலாம் கூறி வரவேற்கிறோம்

மார்ச் 28, 2012

அமானின் துபை மண்டல நிர்வாகிகள் கூட்டம்

அமானின் துபை மண்டல நிர்வாகிகள் கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 23.03.2012 அன்று துபையில் அமானின் மண்டல நிர்வாகக்குழு கூட்டம் சிறப்பாக நடந்தேறியது. இந்த கூட்டம் அமானின் தலைவர் சகோதரர் ஷவ்கத் அலி அவர்கள் தலைமையில் தலைவரின் வரவேற்புரையுடன், சிராஜ் ஹஜ்ரத் அவர்கள் கிராஅத் ஓத துவங்கியது. இந்த கூட்டத்திற்கு அமானின் தலைமை நிர்வாகிகள், துபை மண்டல செயலாளர்கள், ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், பைத்துல்மால் நிர்வாகிகள் என்று அனைவரும் 

மார்ச் 18, 2012

அமான் பைத்துல்மால் கொடையாளர்கள் வேண்டி அழைப்பிதழ்

அமான் பைத்துல்மால் கொடையாளர்கள் வேண்டி அழைப்பிதழ்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் 
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹ்......
அன்பிற்குரிய சகோதரர்களே,

அமானின் பைத்துல்மால் அமைப்பிற்கு கொடையாளர்கள் வேண்டி அழைப்பிதழ் இணைத்துள்ளோம். நீங்கள் அனைவரும்,இன்ஷா அல்லாஹ், இந்த பைத்துல்மால் நிதியத்திற்கு நிதி அளிப்பதோடு, நம் நண்பர்கள் அனைவரையும் இப்பணியில் பங்கு கொள்ள ஊக்குவிக்கக் கேட்டுக்கொள்கிறோம்.உங்கள் அனைவரின் முழுமையான ஒத்துழைப்பு பைத்துல்மால் நிர்வாகிகளுக்கு அவசியம் தேவைப்படுகிறது.

மார்ச் 17, 2012

அமானின் சார்ஜா மண்டல நிர்வாகக் குழு கூட்டம்


அமானின் சார்ஜா மண்டல நிர்வாகக் குழு கூட்டம் 16/03/2012  வெள்ளி மாலை மணியளவில் சார்ஜா ரோலா அல்றகைஸ் ரெஸ்டாரன்ட் மாடியில் அமானின் பொதுச்செயலாளர் M.அமீர்தீன் தலைமையில் நடைப்பெற்றது. கூட்டத்தை சகோதரர் சிராஜ் ஹஜ்ரத் அவர்கள் கிராத் ஓதி துவக்கி வைத்தார்.

பிப்ரவரி 25, 2012

அமானின் அபுதாபி மண்டல நிர்வாகிகள் கூட்டம்


அமானின் அபுதாபி  மண்டல நிர்வாகிகள் கூட்டம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 24.02.2012 அன்று அபுதாபியில் அமானின் மண்டல நிர்வாகிகளின் கூட்டம்

ஜனாஸா செய்தி அறிவிப்பு


ஜனாஸா செய்தி அறிவிப்பு

     நமதூர் ராஜாத்தெரு கு. இ. வீட்டில்  D.A.அஹ்மத்     கபீர், A. மெய்தீன் அப்துல் காதர் இவர்களின் மாமாவும்,  நமதூர் மக்களால் எல்லோராலும் ஹஜ்ரத் என்றுஅழைக்கப்படும் N.P.செய்யது அஹமது அவர்கள் இன்று (25.02.2012) மாலை 5  மணியளவில்  இறைவனடி சேர்ந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .  அன்னாரின் ஜனாஸா  இன்ஷா அல்லாஹ் நாளை நல்லடக்கம் செய்யப்படும்.  அன்னாரின் பாவங்கள்  மன்னிக்கப்பட்டு அவர்களின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம். 

பிப்ரவரி 21, 2012

அமானின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்ற நிகழ்ச்சி

கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதி
அமானின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்ற நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், கடந்த 17.02.2012 அன்று அமானின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுக்கொண்ட நிகழ்ச்சி துபையில் மம்ஸாரில் உள்ள சகோதரர் பனிஅப்தால்  அலுவலகத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். சிராஜ் ஹஜ்ரத் அவர்களின் கிராஅத்துடன் துவங்கிய இந்நிகழ்வில், அமானின் தலைவர் சகோதரர் ஷவ்கத் அலி அவர்கள் வரவேற்று பேசினார்கள்.

பிப்ரவரி 20, 2012

சிறப்பாக நடந்து முடிந்த அமானின் ஐந்தாம் ஆண்டு பொதுக்குழு

சிறப்பாக நடந்து முடிந்த அமானின் ஐந்தாம் ஆண்டு பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு 

அமீரகத்தில் அடியற்கை சகோதரர்களின் சங்கமம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், அமீரகத்தில் கடந்த 10.02.2012 அன்று வெள்ளிக்கிழமை காலை பொழுது விடுமுறை நாள் என்றாலும் துபை மாநகரம்

பிப்ரவரி 11, 2012

சிறப்பாக நடந்தேறிய அமானின் ஐந்தாம் ஆண்டு பொதுக்குழு புகைப்படங்கள்

அமானின் ஐந்தாம் ஆண்டு பொதுக்குழு புகைப்படங்கள்

மேடையை அலங்கரித்த அமான் மூத்த தலைவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள்

ஜனவரி 31, 2012

அமான் ஐந்தாம் ஆண்டு பொதுக்குழு அழைப்பிதழ்

கண்ணியமான அடியற்கை சகோதரர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 10.02.2012 அன்று அமானின் ஐந்தாம் ஆண்டு பொதுக்குழுவும்  மற்றும் நம் சகோதரர்களின் ஒருங்கிணைந்த சந்திப்பு நிகழ்ச்சியும் நடக்க இருக்கிறது. அது சமயம் நமதூர் சகோதரர்கள் அனைவரும் தவறாது பங்கெடுத்து கொள்ள வேணுமாய் உங்களை அன்போடு அழைக்கிறோம். 

ஜனவரி 22, 2012

அபுதாபி மண்டல கூட்டம் புகைப்படங்கள்



அபுதாபி  மண்டல கூட்டம் புகைப்படங்கள் 

சிறப்பாக நடந்து முடிந்த அபுதாபி மண்டல கூட்டம்

 சிறப்பாக நடந்து முடிந்த அபுதாபி மண்டல கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 20.01.2012 அன்று அபுதாபியில் அமானின் மண்டலக்கூட்டம் வெகு சிறப்பாக நடந்தேறியது அல்ஹம்துலில்லாஹ். 

ஜனவரி 16, 2012

அபுதாபி மண்டல கூட்டம் அழைப்பிதழ்

அபுதாபி மண்டல கூட்டம் அழைப்பிதழ்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....

கண்ணியமிக்க அபுதாபி வாழ் அடியற்கை சகோதரர்களே!
 

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 20.01.2012 வெள்ளிக்கிழமை அன்று நமது அமானின் அபுதாபி மண்டலக்கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அது சமயம் அபுதாபி வாழ் அடியற்கை சகோதரர்கள் அனைவரும் அல்லாஹ்வுக்காக  தவறாது கலந்து கொள்ள வேணுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம். மற்ற விபரங்கள் நோட்டீஸில் கண்டுள்ளபடி நிகழ்வுகள் அமையும் இன்ஷா அல்லாஹ்.

ஜனவரி 10, 2012

சிறப்பாக நடந்து முடிந்த ஷார்ஜா மண்டலகூட்டம்

சிறப்பாக நடந்து முடிந்த ஷார்ஜா மண்டலகூட்டம்  
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 06.01.2012 வெள்ளிகிழமை அன்று ஷார்ஜா  ரோலாவில் உள்ள அல் ரக்காயிஸ் தமிழ் ரெஸ்டாரென்ட் மாடியில், சேவை இலட்சியத்துடன் சீரிய நடை போட்டு சென்றுகொண்டிருக்கும் நமது  அமானின் ஷார்ஜா மண்டலகூட்டம் சிறப்பாக நடந்தேறியது அல்ஹம்துலில்லாஹ். 

ஜனவரி 03, 2012

அமானின் ஷார்ஜா மண்டலக்கூட்டம் அழைப்பிதழ்

அஸ்ஸலாமு அலைக்கும், வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு...

கண்ணியமிக்க அடியற்கை சகோதரர்களே!

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 10.02.2012 அன்று அமானின் ஐந்தாவது பொதுக்குழு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. நமது அடியற்கை சகோதரர்கள் அனைவரும்,  நடக்க இருக்கும், அமானின் ஐந்தாவது பொதுக்குழு சிறப்பாக நடந்தேற எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.