எங்களின் இணையதளத்திற்கு வருகை தந்த அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

எங்களின் இணையதளத்திற்கு வருகை தந்த அனைவரையும் அன்புடன் ஸலாம் கூறி வரவேற்கிறோம்

ஜனவரி 03, 2012

அமானின் ஷார்ஜா மண்டலக்கூட்டம் அழைப்பிதழ்

அஸ்ஸலாமு அலைக்கும், வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு...

கண்ணியமிக்க அடியற்கை சகோதரர்களே!

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 10.02.2012 அன்று அமானின் ஐந்தாவது பொதுக்குழு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. நமது அடியற்கை சகோதரர்கள் அனைவரும்,  நடக்க இருக்கும், அமானின் ஐந்தாவது பொதுக்குழு சிறப்பாக நடந்தேற எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
அதற்கு முன்பு முதற்கட்ட பணிகளான, 2012 ஆண்டிற்கான மண்டல செயலாளர்களை தேர்ந்தெடுக்கும் பணிகள் துவங்கியுள்ளன. அதனடிப்படையில், முதலாவதாக ஷார்ஜா மண்டல செயலாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக எதிர்வரும் 06.01.2012 வெள்ளிக்கிழமை அன்று ஷார்ஜாவில், அமானின் ஷார்ஜ மண்டலக்கூட்டம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ( முழுவிபரம் நோட்டீஸில் பார்க்கவும் ) அது சமயம் ஷார்ஜாவில் வசிக்கும் நமதூர் சகோதரர்கள் அனைவரும் அல்லாஹ்வுக்காக,தவறாது கலந்து கொள்ளுமாறு உங்களை அன்போடு அழைக்கிறோம்.  அமானின் ஷார்ஜா மண்டல செயலாளர் பொறுப்பை ஆர்வமுடன் தானே முன்வந்து ஏற்றுக்கொள்ள தயாராகுங்கள். அல்லாஹ்வுக்காக,  ஸதக்கத்துல் ஜாரியா என்னும் நிலையான தர்மம் தான் மறுமையில் நமக்கு சாட்சியாகும். அல்லாஹ்வுக்காக, சமூகப்பணி செய்ய கிடைக்கும் இந்த அரிய வாய்ப்பை நழுவ விடாதீர்கள் சகோதரர்களே! மறுமையில் நாம் அல்லாஹ்விடம் நன்மையை பெற்ற நன்மக்களாக எழுவோம். இன்ஷா அல்லாஹ்.

அடியக்கமங்கலம் முஸ்லிம் அசோசியேஷன் (AMAN)