எங்களின் இணையதளத்திற்கு வருகை தந்த அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

எங்களின் இணையதளத்திற்கு வருகை தந்த அனைவரையும் அன்புடன் ஸலாம் கூறி வரவேற்கிறோம்

ஜனவரி 22, 2012

சிறப்பாக நடந்து முடிந்த அபுதாபி மண்டல கூட்டம்

 சிறப்பாக நடந்து முடிந்த அபுதாபி மண்டல கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 20.01.2012 அன்று அபுதாபியில் அமானின் மண்டலக்கூட்டம் வெகு சிறப்பாக நடந்தேறியது அல்ஹம்துலில்லாஹ். 
அமானின் தலைவர் தலைமையில் தொடங்கிய இக்கூட்டத்திற்கு அமானின் பொதுச்செயலாளர் முஹம்மத் யூசுப்தீன் அவர்கள் கிரா அத் ஓதினார்கள். தொடர்ந்து அமானின் துணை பொதுச்செயலாளர் அல்அமீன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். அதை தொடர்ந்து சிராஜ் ஹஜ்ரத் அவர்கள்  சிறப்புரை நிகழ்த்தினார்கள். ஹஜ்ரத் அவர்களின் சிறப்புரையில் நமது அமான், வெளிநாடு வாழ் அடியற்கை சகோதரர்கள் ஒன்றிணைந்து இந்த அமான் மூலம் நமதூருக்கு நற்பணிகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்கள். அதை தொடர்ந்து அமானின் தேர்தல் அதிகாரிகளான சகோதரர்கள். ஷவ்கத் அலி, பஷீர் அஹ்மத், மற்றும் இமாமுதீன், அவர்கள் முன்னிலையில், 2012 ஆம் ஆண்டுக்கான அமானின் அபுதாபி மண்டல செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். மண்டல செயலாளர்களாக மேலசெட்டித்தெரு அசன் அலியார் அவர்களும், பட்டக்கால் தெரு முஹம்மது காமில் அவர்களும் தேர்வு செய்யப்பட்டார்கள். செயற்குழு உறுப்பினர்களாக ரயிலடித்தெரு ஜெயினுலாபுதீன், ராஜாதெரு ஆதம் மாலிக், மற்றும் ராஜாத்தெரு ஹாஜா நிஜாமுதீன் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இறுதியாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அபுதாபி மண்டல செயலாளர் அசன் அலியார் அவர்களின் நன்றியுரையுடன் கூட்டம் இனிதே நிறைவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.