எங்களின் இணையதளத்திற்கு வருகை தந்த அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

எங்களின் இணையதளத்திற்கு வருகை தந்த அனைவரையும் அன்புடன் ஸலாம் கூறி வரவேற்கிறோம்

டிசம்பர் 25, 2011

நமதூரில் அமான் சார்பாக தினசரி காலண்டர் விநியோகம்

நமதூரில் அமான் சார்பாக தினசரி காலண்டர் விநியோகம்

 இன்று  25.12.2011 நமதூரில் நமது அமான் சார்பாக அமானின் விபரங்கள் அடங்கிய மற்றும் அல்லாஹ்வின் இறைவேத வசனங்கள் மற்றும் ஹதீஸ்கள் அடங்கிய தினசரி காலண்டர் ஊர் முழுவதும் இன்று இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.


நமதூரில் உள்ள எல்லா குடும்பங்களுக்கும் வீட்டுக்கு ஒரு காலண்டர் வீதம் எல்லோர் வீட்டுக்கும் விநியோகிக்கப்பட்டது. இந்த செய்தி அறியும் சகோதரர்கள் அவரவர் வீடுகளுக்கு தொடர்புகொள்ளும்போது, கிடைத்து விட்டதா என்று உறுதி செய்து கொள்ளவும். காலண்டர் கிடைக்க பெறாத வீடுகள் இருந்தால் எங்களை தொடர்பு கொண்டு தெரியப்படுத்தவும். இன்ஷா அல்லாஹ் அவர்களுக்கும் நாம் கிடைக்கசெய்வோம்.  மேலும், இந்த காலண்டர் நமது அமான் சார்பாக வழங்கப்பட்டாலும்,  அமீரகத்தில் உள்ள நமது சகோதரர்கள் அமானுக்கு தாங்கள் வழங்கி வந்த  பேராதரவும், ஆலோசனைகளும் தான் நமக்கு இந்த பணியை செய்யத்தூண்டியது. அதனால் மறுமையில் நமக்கு கிடைக்கும் நன்மைகளில் நாம் எல்லோருக்கும் பங்குண்டு இன்ஷா அல்லாஹ். நமது அமான் சார்பாக இந்த காலண்டர் உருவாக காரணமாக இருந்த அமானின் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் , இதை உருவாக்கி சிறப்பாக விநியோகம் செய்யும் பணிக்கு பின்னால் இருந்து உழைத்த எல்லா நல்ல உள்ளங்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இது போன்ற கனமான  பணிகளை எல்லாம் எங்களுக்கு இலேசாக்கி வைத்த வல்ல அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அல்ஹம்துலில்லாஹ்