எங்களின் இணையதளத்திற்கு வருகை தந்த அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

எங்களின் இணையதளத்திற்கு வருகை தந்த அனைவரையும் அன்புடன் ஸலாம் கூறி வரவேற்கிறோம்

டிசம்பர் 06, 2011

துபையில் நடந்த அமானின் செயற்குழு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் , கடந்த 02.12.2011 வெள்ளிக்கிழமை அன்று அமானின் செயற்குழு கூட்டம் துபையில் இனிதே நடந்தேறியது அல்ஹம்துலில்லாஹ்.   இக்கூட்டத்தில்  அமானின் நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் .  சிராஜ் ஹஜ்ரத்தின் கிரா அத்துடன் துவங்கிய இந்த அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள். 



 அமான் சார்பாக 2012 ஆம் ஆண்டுக்கான தினசரி காலண்டர் அச்சடித்து நமதூரில் உள்ள எல்லா வீடுகளுக்கும் இலவசமாக வழங்குவது எனவும் ,  அதற்குண்டான செலவுகளுக்கு அமீரகத்தில் உள்ள நமதூர் சகோதரர்களிடம் நன்கொடைகளாக பெறலாம் எனவும் , எதிர்வரும் 10.02.2012 அன்று அமானின் வருடாந்திர பொதுக்குழு நடத்துவது எனவும் ,  அதற்கு முன்பு அபுதாபி மற்றும் ஷார்ஜா மண்டலங்களில் மண்டல கூட்டம் நடத்தி 2012 ஆம் ஆண்டுக்கான மண்டல செயலாளர்களை தேர்வு செய்வது எனவும் , தீர்மானிக்கப்பட்டது . 

அமானின் பொதுசெயலாளர் சகோதரர் யூசுப்தீன் அவர்கள் நன்றி கூறி துஆவுடன் நிறைவு செய்தார்கள் .
அல்ஹம்துலில்லாஹ்