எங்களின் இணையதளத்திற்கு வருகை தந்த அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

எங்களின் இணையதளத்திற்கு வருகை தந்த அனைவரையும் அன்புடன் ஸலாம் கூறி வரவேற்கிறோம்

மார்ச் 17, 2012

அமானின் சார்ஜா மண்டல நிர்வாகக் குழு கூட்டம்


அமானின் சார்ஜா மண்டல நிர்வாகக் குழு கூட்டம் 16/03/2012  வெள்ளி மாலை மணியளவில் சார்ஜா ரோலா அல்றகைஸ் ரெஸ்டாரன்ட் மாடியில் அமானின் பொதுச்செயலாளர் M.அமீர்தீன் தலைமையில் நடைப்பெற்றது. கூட்டத்தை சகோதரர் சிராஜ் ஹஜ்ரத் அவர்கள் கிராத் ஓதி துவக்கி வைத்தார்.


கூட்டத்தில் அமானின் முன்னாள் மற்றும் இன்னாள் தலைமை நிர்வாகிகள், சார்ஜா மண்டல தற்போதைய நிர்வாகிகள்,அமானின் பைத்துல்மால் நிர்வாகிகள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்   
கூட்டத்தில் கீழ் கண்ட விஷயங்கள் ஆலோசித்து முடிவெடுக்கப்பட்டன.
  • சார்ஜாவில் அமான் உறுப்பினர்களை அணுகி அமானின் இன்றைய நிகழ்வுகளை எடுத்துக்கூறுவது என முடிவு செய்யப்பட்டது.
  • சார்ஜாவில் சந்தா வசூலை துரிதப்படுத்துவது எனவும், 
  • பைத்துல் மால் பற்றிய விவரங்களை மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கையேடு தயாரிக்க அமான் மற்றும் பைத்துல்மால் தலைமையை வலியுறுத்துவது  எனவும், சார்ஜா சகோதரர்கள் விளக்கம் பெறும் வகையில் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
  • அமானின் பொருளாளர் நிஜாம் அவர்கள் அமான் உறுப்பினர்கள் விவரங்களை எளிதாக அறிந்துக்கொள்ளும் வகையில் அக்சசில் உருவாக்கிய புதிய சிஸ்டத்தை பற்றிய விவரங்களை விவரித்தார்.
  •  .சார்ஜாவில் ரோலா பகுதியில் உள்ள சகோதரர் அஸ்ரப் அலி ரூமில் வருகின்ற வெள்ளிக்கிழமை முதல் குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு தொடங்குவது எனவும் வாரந்தோறும் தொடர்ந்து நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
சார்ஜா மண்டல செயலாளர் A.யூசுப்தீன் நன்றிக்கூற கூட்டம் இனிதே முடிவுற்றது.