எங்களின் இணையதளத்திற்கு வருகை தந்த அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

எங்களின் இணையதளத்திற்கு வருகை தந்த அனைவரையும் அன்புடன் ஸலாம் கூறி வரவேற்கிறோம்

மார்ச் 18, 2012

அமான் பைத்துல்மால் கொடையாளர்கள் வேண்டி அழைப்பிதழ்

அமான் பைத்துல்மால் கொடையாளர்கள் வேண்டி அழைப்பிதழ்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் 
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹ்......
அன்பிற்குரிய சகோதரர்களே,

அமானின் பைத்துல்மால் அமைப்பிற்கு கொடையாளர்கள் வேண்டி அழைப்பிதழ் இணைத்துள்ளோம். நீங்கள் அனைவரும்,இன்ஷா அல்லாஹ், இந்த பைத்துல்மால் நிதியத்திற்கு நிதி அளிப்பதோடு, நம் நண்பர்கள் அனைவரையும் இப்பணியில் பங்கு கொள்ள ஊக்குவிக்கக் கேட்டுக்கொள்கிறோம்.உங்கள் அனைவரின் முழுமையான ஒத்துழைப்பு பைத்துல்மால் நிர்வாகிகளுக்கு அவசியம் தேவைப்படுகிறது.
இவ்வருடம் ரமலான் மாதம் ஆரம்பமாவதற்கு முன்பு கொடையாளர்களிடமிருந்து நிதிகளை முடிந்தவரைப் பெற்று சீரிய முறையில் தேவையானோருக்கு, இன்ஷா அல்லாஹ், பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதே நம் எண்ணம்.
தன்னார்வத்தோடு பல சகோதரர்கள் தங்களின் பங்களிப்பையும் ஆதரவையும் தெரிவித்து வருகையில், இதுவரை சுமார் 9500 திர்ஹம் வரை பைத்துல்மால் நிதியத்திற்கு உத்தரவாதம் அளித்து, தங்களின் பெயர்களை பதிவு செய்து வருகின்றார்கள். அல்ஹம்து லில்லாஹ். தங்களின் பெயர்களை பதிவு செய்ய சில சகோதரர்கள் விரும்பாத காரணத்தால், மற்றவர்களுடைய பெயர்களையும் இங்கு வெளியிடாமல் தவிர்க்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.
நமதூர் சகோதரர்கள் மட்டுமல்லாது நாகூரைச் சேர்ந்த சகோதரர் ஒருவர் நம்முடைய மற்ற சேவைகளினால் ஈர்க்கப்பட்டு வருடத்திற்கு 3600 திர்ஹம் பைத்துல்மால் நிதியாக தர உத்தரவாதம் அளித்துள்ளதை இங்கு நன்றியோடு நினைவு கூறுகிறோம். எனவே, நீங்கள் எல்லோரும் ஆர்வமுடன் இப்பணியில் பங்கெடுத்துக் கொள்வதோடு, உங்கள் நண்பர்களுக்கும் இச்செய்தியை முடிந்தவரை எத்திவைக்க கேட்டுக் கொள்கிறோம்.
எல்லாம் அறிந்த அல்லாஹ் நம் எண்ணத்தை ஈடேற்றி வைப்பானாக. ஆமீன். வஸ்ஸலாம்.
அன்புடன்
அ. பனீ அப்தால்

(பைத்துல்மால் நிர்வாகத்திற்காக)