எங்களின் இணையதளத்திற்கு வருகை தந்த அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

எங்களின் இணையதளத்திற்கு வருகை தந்த அனைவரையும் அன்புடன் ஸலாம் கூறி வரவேற்கிறோம்

மார்ச் 28, 2012

அமானின் துபை மண்டல நிர்வாகிகள் கூட்டம்

அமானின் துபை மண்டல நிர்வாகிகள் கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 23.03.2012 அன்று துபையில் அமானின் மண்டல நிர்வாகக்குழு கூட்டம் சிறப்பாக நடந்தேறியது. இந்த கூட்டம் அமானின் தலைவர் சகோதரர் ஷவ்கத் அலி அவர்கள் தலைமையில் தலைவரின் வரவேற்புரையுடன், சிராஜ் ஹஜ்ரத் அவர்கள் கிராஅத் ஓத துவங்கியது. இந்த கூட்டத்திற்கு அமானின் தலைமை நிர்வாகிகள், துபை மண்டல செயலாளர்கள், ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், பைத்துல்மால் நிர்வாகிகள் என்று அனைவரும் 

கலந்து சிறப்பித்தனர். துணைத்தலைவர் சகோதரர் ஷேக்தாவூது அவர்கள் அமான் உறுப்பினர்களிடமிருந்து எளிமையான முறையில் சந்தா பெறுவது பற்றிய முறையை தெளிவாக விளக்கினார்கள், தொடர்ந்து, அமானின் பொருளாளர் சகோதரர் நிஜாமுதீன் அவர்கள் உறுப்பினர்களின் சந்தா வரவு பதிவு செய்யும் முறையை MS Access - சாஃப்ட்வேரில் புரோகிராம் செய்து வைத்து அதை எப்படி செயல்படுத்துவது என்ற முறையை அனைத்து நிர்வாகிகளும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கமளித்தார்கள். தொடர்ந்து, பைத்துல்மால் நிர்வாகிகளின் கலந்துரையாடல் நடைபெற்றது. இறுதியாக, பொதுச்செயலாளர் சகோதரர் அமீருதீன் அவர்கள் நன்றி கூறி துஆ ஓதி அமர்வை நிறைவு செய்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.
1. துபை மண்டல செயலாளர்கள் உறுப்பினர்களிடம் தொடர்பு கொண்டு பாக்கி வைத்துள்ள சந்தாவை பெறுவது
2. நிர்வாகத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் பாக்கி வைத்துள்ள சந்தா பாக்கியை முழுமையாக செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது
3. அமானின் தாயக அலுவலகத்திற்கு மின்சார இணைப்பு மிக விரைவில் கிடைத்தவுடன் அமான் எஜுகேஷன் செண்டர் துவங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
4. நமதூர் சகோதரர்கள் அதிகமான பேர் துபையில் வசித்து வரும் சூழலில் அமானுக்கு சந்தா வரவு மிகக்குறைவாகவே காணப்படுகிறது. அதனால், 2012 ஆம் ஆண்டுக்கான சந்தாவினையும் பழைய சந்தாக்களையும் துபை வாழ் சகோதரர்கள் தயங்காமல் கொடுக்க முன்வர வேண்டும் என இந்த கூட்டத்தின் வாயிலாக  கேட்டுகொள்ளப்பட்டது.
5. அமான் பைத்துல்மாலின் அடுத்த கட்ட நடவடிக்கையாக ஜகாத் பற்றிய தெளிவான விளக்கம் அடங்கிய கையேடு ஒன்று அமான் சார்பாக அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.